Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

OCI (Overseas Citizen of Indian Origin) அட்டை புதுப்பித்தல் எளிதாகிறது

OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டைகளை புதுப்பிக்கும் விதிகளை இந்திய உள்துறை அமைச்சகம் எளிதாக்கியுள்ளது.

OCI Card
Source: SBS

20 வயதை எட்டிய பின்னர் OCI அட்டை பெறும் ஒருவர் இனி புதிய கடவுச் சீட்டு அல்லது பாஸ்போர்ட் பெற்றாலும் OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டையை புதுப்பிக்கத் தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

20 வயதை அடைவதற்கு முன்னர் OCI அட்டைதாரராக பதிவுசெய்யும் ஒருவர் தான் புதிய பாஸ்போர்ட் – கடவுச் சீட்டு பெறும்போது OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டையை புதுப்பிக்கவேண்டும் என்ற விதி தொடரும். ஏனெனில்  ஒருவரின் முகத்தோற்றம் மாறும் என்பதால் 20 வயதை அடைவதற்கு முன்னர் புதிய கடவுச் சீட்டு பெறும்போது OCI அட்டையையும் புதுப்பிக்கவேண்டும் என்று இந்திய அதிகாரி கூறினார்.

ஆனால் ஒருவர் 20 வயதை பூர்த்திசெய்தபின்னர் அவர் புதிய பாஸ்போர்ட் – கடவுச் சீட்டு பெற்றாலும் OCI அட்டையை புதுப்பிக்கத் தேவையில்லை என்று புதிய விதி கூறுகிறது.

மேலும் புதிய பாஸ்போர்ட் பெற்ற மூன்று மாதங்களுக்குள் OCI அட்டை தொர்பான ஆவணங்களை ஒருவர் பதிவேற்ற வேண்டும். அப்படி புதுப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டபின் புதிய அட்டை வழங்கப்படும்வரை OCI அட்டைதாரர்களுக்கு எந்தவொரு பயணத் தடையும் இருக்காது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்திய பூர்வீக மக்களுக்கு இந்திய அரசு  இதுவரை 37.72 லட்சம் OCI (இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்) அட்டைகளை வழங்கியுள்ளது.

 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


1 min read

Published

Updated

By Raysel

Source: India government


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now