2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பிரிஸ்பேன் நகருக்கு கிடைத்துள்ளது.
2032 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்த நகரங்களின் பட்டியலில் சர்வதேச ஒலிம்பிக் கழகத்தின் விருப்பத்தெரிவாக பிரிஸ்பேன் காணப்பட்ட பின்னணியில் இன்று இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த இந்திய தலைநகர் புதுடெல்லி, கத்தார் நாட்டின் தலைநகர் Doha, ஹங்கேரி நாட்டின் தலைநகர் Budapest, துருக்கி நாட்டின் Istanbul, இந்தோனேசிய நாட்டின் தலைநகர் Jakarta ஆகிய நகரங்கள் போட்டியில் இருந்தன.
கூடவே பிரிஸ்பேன் மற்றும் சீனாவின் Chengdu மற்றும் Chongqing நகரங்களும் போட்டியிட்டன.
இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஆரம்பமாவதற்கு முன்னதாக இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பொதுக்கூட்டத்தில் பிரிஸ்பேனுக்கு ஆதரவாக சர்வதேச ஒலிம்பிக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிரான்சின் பாரிஸ் நகரும், 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரும் நடத்துவதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாக இது அமையவுள்ளது. முன்னதாக 1956ம் ஆண்டு மெல்பன் நகரிலும் 2000ம் ஆண்டு சிட்னி நகரிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றிருந்தன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
