SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் எட்டில் ஒருவரை மதுப்பிரியர் ஆக்கியுள்ள கொரோனா - ஆய்வு

Alcohol vs COVID-19
Source: Pexels

1 min read

Published


Skip to article content

கொரோனா பரவலை தடுப்பதற்கு இயல்புவாழ்வின் மீது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் அறிமுகமான பின்னர், சராசரியாக எட்டில் ஒரு ஆஸ்திரேலியர் தினமும் மது அருந்தும் பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது மற்றும் போதைப்பொருள் பாவனை கண்காணிப்பு மையம் சுமார் ஆயிரம் பேரிடம் நடத்திய மாதிரி ஆய்வில் இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சராசரியாக பத்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர், வாரத்தில் 10 standard drinks - என்ற உடலுக்கு அதிகம் தீங்கு விளைவிக்காத மது அளவிலும் பார்க்க அதிக மதுவை வாரமொன்றுக்கு அருந்துகிறார்கள் என்றும், இது புற்றுநோய் உள்ளிட்ட பாரதூரமான நோய்களுக்கு வழிவகுக்கக்கூடியது என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கமாக அருந்துவதிலும் பார்க்க அதிக மதுவை அருந்துகின்ற இந்தப்பழக்க முறைக்குள் வெறும் 66 நாட்களுக்குள் குறிப்பிட்ட மதுப்பிரியர்கள் வீழந்திருக்கிறார்கள் என்று இந்த ஆய்வில் பதிலளித்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now