2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் மாத்திரம் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகளவான பொருட்களை இணைய வழியாக ஆஸ்திரேலியர்கள் கொள்முதல் செய்திருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுகர்வுக் கலாச்சாரத்தின் இன்னொரு படியாகவும் கோவிட் காலத்தின் பிரதான விளைவாகவும் உருவாகியிருக்கும் இணைய வழி வர்த்தகமும் அதன் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் சுமார் 320 கோடி டொலர்களுக்கு ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் இணைய வழி கொள்முதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 70 சத வீத அதிகரிப்பு என்றும், கடந்த மார்ச் மாதத்திற்கும் ஓகஸ்ட் மாத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் ஒன்பது லட்சம் வீடுகளைச் சேர்ந்தவர்கள் முதல் தடவையாக ஏதாவது ஒரு பொருளை இணையம் வழியாக வாங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
