விக்டோரியாவில் ஏற்பட்டுள்ள COVID-19 திடீர் அதிகரிப்பிலிருந்து ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டியவை எவையென்பது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசின் தாதியியல் மற்றும் மகப்பேறுதாதியியல் தலைமை அதிகாரி அலிசன் மக்மில்லன் அவர்கள் விடுத்துள்ள செய்தி.
அண்மையில் மெல்பர்ன் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் COVID-19 பெருந்தொற்று நோயாளிகளின் திடீர் அதிகரிப்பு ஏமாற்றம் அளிப்பதாயுள்ளது, ஆனாலும் நாங்கள் எப்போதும் அதிகளவிலான நோயாளிகள் ஏற்படுவதை எதிர்பார்த்தே இருந்தோம். இது நாடு முழுவதற்கும் ஒரு முக்கியமான நினைவூட்டல் ஆகும்.
இவ்வாறான திடீர் அதிகரிப்புகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வது மிகத் தேவையானதாகும், இல்லையேல் ஆஸ்திரேலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகளவில் நோயாளிகளைக் காணக்கூடிய ஆபத்திருக்கிறது என்பதோடு COVID-19க்கு எதிரான நம் போராட்டத்தில் நிறைவேற்றுவதற்காக நாம் அனைவரும் மேற்கொண்ட கடினமான உழைப்பின் பெரும்பகுதி குந்தகத்துக்கு உள்ளாகி விடும்.
நான் வலியுறுத்திக் கூற விரும்பும் முக்கியமான செய்தியானது COVID-19ஐ எதிர்கொள்வதில் நாம் வெற்றி அடைந்திருந்தாலும், ஆஸ்திரேலியாவில் இந்தப் பெருந்தொற்றுக்கு முன்னதாக நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்கான கட்டத்தை நாம் எட்டவில்லை. இந்த வைரஸ் இன்னும் நம்மிடையே இருக்கிறது, இன்னும் ஓரளவு காலத்திற்கு இருந்து கொண்டுதான் இருக்கும் - மற்றும் சர்வதேச நிலைமை தொடர்ந்தும் மோசமாகிக் கொண்டிருக்கிறதேயொழிய முன்னேற்றம் என்பதில்லை.
விக்டோரியாவில் நிலவும் இந்த திடீர் அதிகரிப்பானது நாம் ஆளாளுக்கிடையே தள்ளியிருப்பது, நல்ல சுகாதாரம் பேணுவது, உடல்நலமில்லாதிருந்தால் வீட்டிலேயே தங்கியிருப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால் இவ்வாறான நோய்ப்பரவல் எவ்வளவு எளிதாக ஏற்பட்டுவிடும் என்பதையே காட்டுகிறது. இது மேலும் கோவிட்சேஃப் (COVIDSafe) என்னும் செயலியை தரவிறக்கம் செய்வதன் முக்கியத்துவத்திற்கான நினைவூட்டலாகவும் உள்ளது, அந்த வகையில் COVID-19 நோய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்ட மக்களோடு நெருக்கமான அணுக்கத்திலுள்ளவர்களை சுகாதார அதிகாரிகள் துரிதமாக கண்டுபிடிக்க முடியும்.
இந்த "நோய் துப்பறிவாளர்கள்" எவ்வளவு விரைவாக இவ்வாறான நெருக்கமான அணுக்கத்திலுள்ளவர்களை கண்டுபிடிக்க முடிகிறதோ அவ்வளவு துரிதமாக இந்த வைரஸ் பரவிக்கொள்வதைத் தடுக்க முடியும்.
எனவே இந்த மெல்பர்ன் திடீர் அதிகரிப்பிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டிருக்கிறோம்? இந்த புதிய நோயாளிகளில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் குடும்ப ஒன்றுகூடல்களில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இது நமக்கு எதைத் தெரிவிக்கிறது? சில ஆஸ்திரேலியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களுக்கு நன்கு தெரிந்த மக்களுக்கு மத்தியிலும் கூட COVID-19 அபாயகரமானதாக இருக்க முடியும் என்பதனை, சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்று தோன்றக் கூடும்.
COVID-19க்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அதிகளவிலான மக்கள் இல்லங்களிலும், விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்றதான இடங்களிலும் சந்தித்துக் கொள்ள முடிகிறது என்ற நிலையில், சில ஆஸ்திரேலியர்கள், சமூகப் பழகல்களில் ஆளாளுக்கிடையே பாதுகாப்பான தூரத்தில் விலகியிருப்பதை கடைப்பிடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கின்றனர். இது எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக முதியவர்கள், போன்றோர் COVID-19 விளைவுகளுக்கு பலியாகும் நிலையோடு, பரவலாக சமூகத்திலுள்ள இதர மக்களையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது.
எனவே தயவுசெய்து ஒரு நிகழ்விடத்திலோ எவரேனுமொருவரது இல்லத்திலோ பானம் அருந்துவதற்கோ சிற்றுண்டி உண்பதற்கோ நண்பர்களை சந்திக்க செல்வீர்களாயின், ஆளாளுக்கிடையில் சரியான தூரத்தில் விலகியிருப்பதை அனுசரித்து, பாதுகாப்பாக செயற்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்த முக்கியமான செய்தியை குடும்ப உறுப்பினர்களோடும், நண்பர்களோடும், அக்கம்பக்கத்தினரோடும், உங்களது சமூக மற்றும் வணிக தொடர்புவலையங்களின் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.
இந்த விக்டோரிய திடீர் அதிகரிப்பானது, ஆளாளுக்கிடையே விலகியிருத்தல் மற்றும் நல்ல சுகாதாரம் பேணுதல் ஆகியவற்றை கடைப்பிடித்துக் கொள்வது என்பதோடு கோவிட்சேஃப் (COVIDSafe) செயலியை தரவிறக்கம் செய்வது எனும் அதிமுக்கிய செய்திகளை, ஆங்கிலம் முதன்மை மொழியாக பேசப்படாமலோ வாசிக்கப்படாமலோ இருக்கும் சமூகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுதலில் நாம் விடாமல் பணியாற்ற வேண்டிய தேவையையும் நமக்குத் தெரிவிக்கிறது.
இந்த COVID-19 பெருந்தொற்றானது முன்னடைந்திருக்குமிடத்து, நமது பல்லினக்கலாச்சார சமூகத்தினர் இற்றைப்படுத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்யும் பொருட்டு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஓர் எடுத்துக்காட்டுக்காக, தனிநபர்கள், குடும்ப அலகுகள் மற்றும் வணிக அமைப்புகளுக்கு உதவிட அதிமுக்கியத் தகவல்கள் 63 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
"உங்கள் மொழியில் COVID-19 தகவல்கள்" என்ற இணையதளம் செயலேவப் பட்டதிலிருந்து இவ்விணையதளத்தின் பிரத்தியேகப் பார்வையிடல்கள் 900,000க்கும் அதிகமாக நடந்துள்ளன.
ஆஸ்திரேலிய அரசின் உள்துறைத் திணைக்களமானது, தனது சமூகத் தொடர்பு அதிகாரிகளின் மூலமாக, இந்தப் பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து பல்லினக்கலாச்சார சமூக குழுக்களோடு, தேசிய அளவில் 4300 முறைகள் தொடர்பு கொண்டிருக்கிறது.
இதனையும் தாண்டி, அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலையிலும், தாங்கள் COVID-19க்காக சோதிக்கப்படுவது குறித்து சிலர் கவலைப்படக்கூடும் என்பது தெளிவாகிறது. எனவே இரண்டு விடயங்களில் நான் மக்களுக்கு மறுஉறுதி அளிக்கிறேன்: ஆஸ்திரேலிய அரசு நிதியுதவிபெற்ற பொது மருத்துவரின் தலைமையிலியங்கும் சுவாச மருத்துவ நிலையமொன்றில் சோதனை செய்து கொள்வது முற்றிலும் இலவசமாகும் - அத்தோடு நீங்கள் மருத்துவ கவனிப்பு (மெடிக்கேர்) அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
COVID-19ஐ வென்றெடுக்க இன்னும் நெடுந்தூரம் கடக்க வேண்டியுள்ளது, அத்தோடு இப்பொழுது அசட்டுத் துணிச்சலுக்கான தருணமல்ல. தயவுசெய்து ஆளாளுக்கிடையே தூரம்விட்டு விலகியிருத்தலையும் நல்ல சுகாதாரம் பேணுதலையும் தொடர்ந்து கடைபிடியுங்கள். மேலும் தயவுசெய்து, நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருந்து கொள்ளுங்கள்.
-ஆஸ்திரேலிய அரசின் தாதியியல் மற்றும் மகப்பேறுதாதியியல் தலைமை அதிகாரி அலிசன் மக்மில்லன்-
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
