SKIP TO MAIN CONTENT

வாடிக்கையாளர் விவரங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் Optus நிறுவனத்துக்கு எதிராக வழக்கு!

optus
Source: Flickr

1 min read

Published

Updated


Skip to article content

Optus நிறுவனம் தனது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை  பொதுத்தளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில்-பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சார்பில் நட்ட ஈடு கோரி பாரிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் Information and Privacy Commissioner Angelene Falk முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Optus நிறுவனத்தின் சேவையை புதிதாக பெற்றுக்கொள்வதற்கு இணைந்துகொண்ட 40 ஆயிரம் பேர் உட்பட சுமார் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண், வீட்டு முகவரி போன்ற விவரங்கள்  whitepages ஊடாக கடந்த ஆண்டு வெளியாகியது. இவ்விவரங்கள் தவறுதலாக வெளியானதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் வாடிக்கையாளர்களின் அனுமதியைப்  பெற்றுக்கொள்ளாமல் whitepages ஊடாக Optus நிறுவனம் இந்த விவரங்களை வெளியிட்டது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வழக்கில் சுமார் நான்கு கோடி டொலர்கள் வரையான நட்டஈடு கோரப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now