இறந்தவர்கள் உடலுறுப்பைக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 510 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய வருடம் அந்த எண்ணிக்கை 247 என்பது நோக்கத்தக்கது.
Organ and Tissue Authority வெளியிட்ட தரவுகளின்படி, உடலுறுப்பு பெறுநர்கள் எண்ணிக்கை 75% அதிகரித்துள்ளது, 1,400ற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் 2017ம் ஆண்டு மற்றொருவர் உடலுறுப்பைப் பெற்றுள்ளனர்.
சூழ்நிலை காரணமாக, மருத்துவமனையில் இறந்த ஆஸ்திரேலியர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே உடலுறுப்பைத் தானம் செய்யக்கூடியதாக இருக்கிறது.
கடந்த ஆண்டு, மருத்துவமனையில் 76,000 க்கும் அதிகமானோர் இறந்தார்கள் ஆனாலும் 1,192 மட்டுமே உடலுறுப்பைத் தானம் செய்யும் நிலையில் இருந்தார்கள். ஆக, இறந்தவர்களில் 510 பேர் உடலுறுப்பைத் தானம் செய்தார்கள். 1,402 பேர் அவற்றின் மூலம் பயனடைந்தார்கள். உயிருடன் இருக்க்ப்பவர்கள் 273 பேர், உடலுறுப்பை, முக்கியமாக சிறுநீரகத்தைத் தானம் செய்திருந்தார்கள்.
உடலுறுப்பைத் தானம் செய்யக் கூடியவர்கள் அதனைச் செய்ய ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் Ken Wyatt வலியுறுத்துகிறார்.
கடந்த ஆண்டு டஸ்மேனிய மாநிலத்த்தவர், விகிதாசாரத்தில் அதிகளவில் உடலுறுப்பைத் தானம் செய்துள்ளார்கள்.
2017 ஆம் ஆண்டு உடலுறுப்பைத் தானம் செய்தவர்கள்:
குயின்ஸ்லாந்து - 105
NSW - 135
விக்டோரியா - 148
தெற்கு ஆஸ்திரேலியா - 32
மேற்கு ஆஸ்திரேலியா - 54
டஸ்மேனியா - 19
NT - 3
ACT - 14
