Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஊழியர்களை சுரண்டிய குற்றத்துக்காக இந்திய உணவக உரிமையாளருக்கு அபராதம்.

முந்தைய ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் ஊழியர்களால் அளிக்கப்பட்ட புகார்கள் இருந்தபோதிலும், அவ்வுரிமையாளர் ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளத்தையே தொடர்ந்தும் வழங்கிவந்துள்ளார்.

cc

This image is for representation purpose only. Source: Wikipedia

நியூசிலாந்தில் பிரபலமான உணவகத்தின் உரிமையாளருக்கே, பணியாளர்களுக்கு குறைந்தளவு ஊதியம் வழங்கிவந்தமைக்காக $41,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் கொடுக்க தவறிய Shamiana and Shamiana Enterprises நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் உரிமையாளருமான Satish Shetty, என்பவருக்கே NZ’s Labour Inspectorate இனால் இவ்வாபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 22 உணவகங்களை வைத்துள்ள சதீஷ் ஷெட்டி மீது சம்பளம் தொடர்பிலான பல புகார்களை பல ஊழியர்கள் வழங்கியதை காரணத்தினாலேயே விசாரணைகளின்பின்னர், ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் கொடுக்க தவறியமை நிரூபிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அந்நிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கு $18,000 ஊதிய நிலுவை மற்றும் இழப்பீடு வழங்கும்படி Employment Relations Authority யினால் உத்தரவிடப்பட்டது. குறைந்தளவு ஊதியம் வழங்கியது மட்டுமன்றி ஊழியர்களை தவறாக நடத்திவந்த காரணங்களினாலும் சதீஷ் ஷெட்டிக்கு மேலதிக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமன்றி, ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக இந்திய உணவகங்களில் இவ்வாறு பலர் சுரண்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உரிமையாளர்கள் பணியாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம் தொடர்பில் விதிமுறைகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் இந்திய உணவு விடுதியில் பணியாற்றிய இரண்டு இந்திய சர்வதேச மாணவர்கள் உணவகத்தின் உரிமையாளரால் 'அடிமை' போன்று நடத்தப்பட்டமை அண்மையில் கண்டறியப்பட்டது. A Fair Work Ombudsman இனால் மிகக் கடுமையான அபராதமும் தண்டனையும் உரிமையாளருக்கு விதிக்கப்பட்டது.

A Fair Work Ombudsman legal action secured a penalty against the former operator of this Indian restaurant in suburban Melbourne for failing to back-pay two underpaid Indian workers.

A $500 penalty was imposed against Hari Pal, who formerly owned and operated Konna Indian Cuisine, later renamed Punjabi Tandoori Corner, in Richmond.

Perth-based Sushil Kumar, who formerly owned and ran the Bricklane British Curry House and Bikaner India (WA) faced court for exploiting his employee who was on a 457 visa and later dismissing him because he lodged a workers’ compensation claim after injuring his back at work.

To know if you are being exploited at work or if you are an employer or an employee seeking assistance, visit the www.fairwork.gov.au or call the Fair Work Infoline on 13 13 94. An interpreter service is available on 13 14 50.

 

 

 


2 min read

Published

By Praba Maheswaran



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now