SKIP TO MAIN CONTENT

Oxfam நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழர் நியமனம்!

Danny Sriskandarajah
Source: Danny Sriskandarajah

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

லண்டனை தளமாக கொண்ட Oxfam தொண்டு நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக தமிழரான டனி ஸ்ரீஸ்கந்தராஜா நியமிக்கப்படவுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட Civicus நிறுவனத்தின் தலைவராக பணியாற்றும் டனி ஸ்ரீஸ்கந்தராஜா இவ்வருட இறுதியில் பதவியை பொறுப்பேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 சுயாதீன தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான Oxfam நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி Mark Goldring, தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்த பின்னணியில் இப்பொறுப்புக்கு டனி ஸ்ரீஸ்கந்தராஜா நியமிக்கப்படுகிறார்.

இலங்கையில் பிறந்த டனி, பின்பு ஆஸ்திரேலியாவில் குடியேறி தனது மேற்படிப்பினை மேற்கொண்டிருந்த நிலையில், 1998ம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்திருந்தார்.

டனி ஸ்ரீஸ்கந்தராஜா Civicus அமைப்பின் தலைமைப் பொறுப்பில் அமர்வதற்கு முதல் Royal Commonwealth Society-இன் நிர்வாக இயக்குனராக பதவி வகித்திருக்கிறார்.

2016/17 தரவுகளின்படி ஆண்டொன்றுக்கு £408.6 மில்லியன் வருமானம் ஈட்டும் Oxfam நிறுவனம் உலகின் பல பாகங்களில் ஐயாயிரம் பணியாளர்களையும் லட்சக்கணக்கான தொண்டர்களையும் கொண்டியங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now