மெல்பேர்ணில் பிச்சைக்காரர் ஒருவருக்கு பிரதமர் Malcolm Turnbull 5 டொலர்கள் பிச்சை போட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை மெல்பேர்ணில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்த பிரதமர், வீதியிலிருந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு 5 டொலர்கள் கொடுப்பதைக் காட்டும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியது.
இவ்வாறு வீதியில் இருந்து பிச்சையெடுப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என சொல்லப்படும் நிலையில் பிரதமர் Malcolm Turnbull இவ்வாறு செய்தது எந்த வகையில் நியாயம் என பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், அந்தத் தருணத்தில் தான் இரக்கத்தால் உந்தப்பட்டு குறித்த நபருக்கு 5 டொலர்களை வழங்கியதாகவும் தனது செயற்பாடு எவருக்காது ஏமாற்றத்தை அளித்திருந்தால் அதற்காக தாம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தனது மற்றக்கைகளில் இன்னும் பணம் இருந்தும் பிரதமர் 5 டொலர்களை மட்டும் தானம் செய்தது ஏன் என மற்றொரு தரப்பினர் கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Prime Minister Malcolm Turnbull has defended giving $5 to a beggar in Melbourne, putting him at odds with the city's lord mayor who says giving money to people on the street entrenches homelessness.
Mr Turnbull was photographed on Wednesday putting a $5 note in the cup of a homeless man as he was arriving to give a major speech to the Committee for Economic Development of Australia.
Mr Turnbull was asked by 3AW radio host Neil Mitchell why he gave the man money when people are advised not to do so.
"I know people have got different views on that, but every time I see someone in that situation I always think, 'There for the grace of God go I'," Mr Turnbull said.
"It was a human reaction and I'm sorry if that has disappointed some people. Maybe they think you shouldn't give money to people who are sitting on the street.
"Neil, I felt sorry for the guy and I think that we should all remember, 'There but for the grace of God goes me'."
