விக்டோரியா மாநிலத்தில் போக்குவரத்துக்கட்டணங்கள் அடுத்தவருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2.2 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தக்கட்டண உயர்வின் பிரகாரம் Train,Tram,Bus ஆகியவற்றுக்கான முழுநாள் பயணக்கட்டணம் 20 சதங்களினால் உயர்வடைந்து 8.80 டொலர்களாகவும் இரண்டு மணிநேர பயணச்சீட்டின் கட்டணம் பத்து சதத்தினால் உயர்வடைந்து 4.40 டொலர்களாகவும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டண மாற்றங்களில் மாணவர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ள அரசு, அவர்களது வருடாந்த பயணக்கட்டனத்தை 465 டொலர்களிலிருந்து 333 டொலர்களாகவும் Regional பகுதிகளுக்கு பயணம் செய்பவர்களின் வருடாந்த பயணக்கட்டணம் 385 டொலர்களிலிருந்து 235 டொலர்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விக்டோரியா முழுவதும் கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலை 3 மணி முதல் அடுத்த நாள் boxing day அன்று அதிகாலை 3 மணிவரை அனைவரும் இலவசமாக பணயம் செய்ய முடியும். அதேபோல் வருடப்பிறப்பிற்கு முதல்நாள் பிற்பகல் 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணிவரை இலவசமாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
