பாகிஸ்தான் அணிக்கு எதிராக அந்த நாட்டில் சென்று போட்டிகளில் பங்குபற்றுவது குறித்து முடிவெடுப்பதற்கு தங்களுக்கு இன்னமும் நேரம் தேவை என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை அடுத்த மாதம் அந்த நாட்டு அணியுடன் ஆடவுள்ள போட்டிகளை மூன்றாம் நாட்டில் பொது மைதானத்தில் விளையாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இதன்பிரகாரம் பாகிஸ்தான் அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிகளும் அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறவுள்ளன. இந்தப்போட்டிகள் மார்ச் 22 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான T20 ஆட்டங்களையும் சில உள்ளுர் போட்டிகளையும் எந்தப்பிரச்சினையுமில்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி முடித்துள்ளபோதும் அங்கு பாதுகாப்பு பிரச்சினை தொடர்ந்துவருவதாக பல்வேறு தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு சிறிலங்கா கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகள் சென்று விளையாடுவதற்கு தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த அச்சத்திலிருந்து வெளிநாட்டு அணிகளை வெற்றிகொள்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அயராது முயற்சி செய்துவருகிறது.
