இந்தியாவின் விமானப் படையின் அதிகாரி 51 வயது Group Captain Arun Marwaha புதுடெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் உளவுப் பிரிவினர் social media வழியாக பெண் போன்று நடித்து Group Captain Arun Marwaha இடம் துவக்கத்தில் ஆசைவார்த்தை பரிமாறினார் என்றும், பின்னர் பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களைப் பெறுவதற்காக இந்திய ராணுவ ரகசியங்களை அவர் பாகிஸ்தானியரிடம் கொடுத்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் படையினருக்கு பாரசூட் மூலம் குதிப்பதற்கு பயிற்சி தரும் உயர் நிலையில் இருந்துவந்த Group Captain Arun Marwaha அடுத்த ஆண்டு இந்திய விமானப் படையிலிருந்து ஒய்வு பெரும் நிலையில் இருந்தவராவார். இந்த செய்தி தற்போது சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்துள்ளது.
பாகிஸ்தான் உளவுப் பிரிவு பெண்ணாக நடித்து ராணுவ ரகசியங்களைப் பெற்றது
பாகிஸ்தான் உளவுப் பிரிவு பெண்ணாக நடித்து ராணுவ ரகசியங்களைப் பெற்றது

1 min read
Published
By Raymond Selvaraj
Source: ABC Australia
Skip to article content
Share this with family and friends
Share