SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதி வித்தியாசமான திட்டம்!

AAP
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

ஆஸ்திரேலியாவின் முன்னாள் நீதிபதிகளில் ஒருவரும் member of the Order of Australia விருது பெற்றவருமான Dr Jim Macken புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக வித்தியாசமான ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நவுறு அல்லது மனுஸ் தீவிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்குப் பதிலாக தான் அங்கே போய் வாழ்வதாகவும் தன்னுடைய குடியுரிமையை அந்த புகலிடக்கோரிக்கையாளருக்கு வழங்கி அவரை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறும் கோரி 88 வயதான Dr Jim Macken குடிவரவு அமைச்சர் Peter Dutton க்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தனது மனப்பூர்வமான கோரிக்கை என்றும் அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து தம்மால் இனியும் பேசாமலிருக்க முடியாது என்றும் Dr Jim Macken கூறியுள்ளார்.

இதேவேளை Dr Jim Macken இன் கோரிக்கை தொடர்பில் அமைச்சர் Peter Dutton இதுவரை பதிலளிக்கவில்லை.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now