SKIP TO MAIN CONTENT

“புகலிடக்கோரிக்கையாளர் குறித்து கவலைப்படுகிறேன், ஆனால் அனுமதியில்லை” – பிரதமர்

'They will never come to Australia': Turnbull maintains tough stance on asylum seekers

Malcolm Turnbull
Malcolm Turnbull Source: Getty Images

2 min read

Published

Updated

By Raymond Selvaraj


Skip to article content

“புகலிடக்கோரிக்கையாளர் குறித்து கவலைப்படுகிறேன் ஆனால் அனுமதியில்லை” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull கூறினார். மானஸ் மற்றும் நவ்ரு தீவுகளில் உள்ள புகலிடம் கோருவோர் தடுப்பு முகாம்கள் குறித்து தாம் கரிசனை கொண்டிருந்தாலும், புகலிடக்கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தமாட்டோம் என்று பிரதமர் Malcolm Turnbull கூறினார். எல்லைப்பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா கடுமையான போக்கை கையாள்வதாக ஒருவர் கூறலாம், ஆனால் அந்த கொள்கையே இதுவரை சிறப்பாக செயலபட்டுள்ளது என்று பிரதமர் Malcolm Turnbull அவர்கள் ABC ஊடகத்திடம் இன்று மாலை தெரிவித்தார்.

மானஸ் மற்றும் நவ்ரு தீவுகளில் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முறையை மாற்றும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் கூறிய பிரதமர் Malcolm Turnbull, மானஸ் மற்றும் நவ்ரு தீவுகளில் உள்ள முகாம்களின் நிலை குறித்து யாருமே கவலை கொள்ளாமலிருக்க இயலாது என்று கூறினார். மேலும் புகலிடம் கோருவோர் தாங்கள் வந்த இடத்திற்கு திரும்புவது, பாபாநியூகினி அல்லது கம்போடியா அல்லது வேறு ஏதாவது வழிமுறை என்று தடுப்புமுகாம்களில் உள்ளவர்களை மீள குடியமர்த்தவே அரசு விரும்புகிறது என்று பிரதமர் Malcolm Turnbull கூறினார்.      

     

Prime Minister Malcolm Turnbull has ruled out resettling refugees who are processed on Manus Island or Nauru in Australia.He said while he was "concerned" about conditions within the offshore processing network, the Coalition did not want to encourage asylum seekers to risk their lives at sea.Mr Turnbull told ABC the Federal Government could not afford to take a backwards step on the issue.

"There will be no resettlement of the people on Manus and Nauru in Australia. They will never come to Australia," Mr Turnbull said. "Now, I know that's tough, we do have a tough border protection policy, you could say it's a harsh policy, but it has worked."

Mr Turnbull had earlier told Sky News that any changes to any policy would be done in a "considered way" and would be made by Cabinet. He said conditions within the two offshore processing centres in Papua New Guinea and Nauru could be improved.

"[Immigration Minister Peter] Dutton and I, and the Government, we are concerned about the situation on Manus and Nauru."We're concerned that people are detained there, naturally it is not an ideal environment, we are doing everything we can to encourage them to return to where they came and the Government is actively looking at means of resettling them, whether it is in PNG, or indeed in Cambodia or looking at other options. "It is tough, but the fact is we cannot take a backwards step on this issue."


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now