நவுறு மற்றும் மனுஸ் தீவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் எனவும் The Australian செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவுறு மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என அச்செய்தி கூறுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா- ஆஸ்திரேலியா இடையில் நீண்ட நாட்கள் நடத்தப்பட்டுவந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவின் புதிய அதிபராக Donald Trump பதவியேற்பதற்கு முன் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அரச தரப்பு அமைச்சர்கள் இச்செய்தியை உறுதிப்படுத்த மறுத்துள்ளதுடன் புகலிடக்கோரிக்கையாளர்களை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவது குடிவரவு அமைச்சர் Peter Duttonனுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறியுள்ளனர்.
அதேநேரம் இச்செய்தியை வரவேற்றுள்ள லேபர் கட்சி முக்கியஸ்தர் Anthony Albanese உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டுள்ளவர்கள் அமெரிக்கா போன்ற நாட்டில் குடியமர்த்தப்படுவது நல்லதொரு விடயம் எனக் கூறினார்.
Share
