விக்டோரியா மாநிலத்தின் 30 பாடசாலைகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரம் ஒன்றை எதிர்வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கின்றனர்.
Teachers for Refugees என்ற அமைப்பு 'முகாம்களை மூடிவிட்டு புகலிடக்கோரிக்கையாளர்களை இங்கே அழைத்துவாருங்கள்' என்ற வசனம் எழுதப்பட்ட T-shirtகளை அணிந்து கொண்டு பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளனர்.
அத்துடன் மாணவர்களுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் குறித்த விளக்கத்தை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Source: Teachers for Refugees
ஆனால் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் இப்படியான விடயங்களில் ஈடுபடுவது தவறெனத் தெரிவித்துள்ள குடிவரவு அமைச்சர் Peter Dutton, தமது அரசியலை வகுப்பறைகளுக்கு வெளியே வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம் அவர்கள் பணி இடைநீக்கமும் செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
