SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான குடியேற்றத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு ஆஸ்திரேலியாவுக்கு உத்தரவு !

AAP
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

மனுஸ் தடுப்பு முகாமில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான குடியேற்றத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு பப்புவா நியூகினி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுஸ் தடுப்பு முகாமில் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்க வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானதென அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்தப் பின்னணியில் குறித்த முகாமிலுள்ள 900 புகலிடக்கோரிக்கையாளர்களும் எங்கே அனுப்பப்படுவார்கள் என்பதை ஆஸ்திரேலிய அரசு இதுவரை அறிவிக்காத நிலையில் அரசின் பிரதிநிதி ஒருவர் இவர்களுக்கான குடியேற்றத்திட்டத்தை நீதிமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துக்கூற மறுத்துள்ள குடிவரவுத் திணைக்களம், குறித்த விடயம் ஆஸ்திரேலிய அரசுக்குத் தெரியும் என கூறியுள்ளது.

இதேவேளை மனுஸ் தடுப்பு முகாமை மூடிவிடுமாறு பப்புவா நியூகினி பிரதமர் Peter O'Neill ஏற்கனவே அறிவித்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Papua New Guinea's Supreme Court has ordered Australia to present a resettlement plan for nearly 900 asylum seekers held in what it ruled in April is an illegal detention centre on Manus Island.

The Supreme Court said it would call on Australia to provide a representative on Thursday to provide details on a resettlement plan.

"The court has embarked on this process on issue of resettlement. That is a matter for the two governments, what we want is for them to be released," said Ben Lomai, a lawyer for some of the detainees.

A spokesman from the Department of Immigration and Border Protection said "The Australian Government is aware of the matter, but is not a party to the proceedings".

"Beyond this, it would not be appropriate to provide further comment as the matter remains before the court."

The Supreme Court ruled more than three months ago that the Regional Processing Centre, used to house asylum seekers trying to reach Australia, was illegal.

It was approved by the Papua New Guinea Government and is funded by the Australian Government.

Prime Minister Peter O'Neill ordered the closure of the Manus centre after the Supreme Court ruling, raising the question where will the detainees be resettled.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now