SKIP TO MAIN CONTENT

"புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் நேர்முகத்தேர்விற்கு உட்படுத்தப்படுகின்றனர்"

Asylum seekers in the Manus Island detention centre
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: ABC Australia



Skip to article content

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட அகதிகள் உடன்படிக்கையின் ஒரு அங்கமாக நவுறுவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் Julie Bishop தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-ஆஸ்திரேலியா அகதிகள் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பம் இருந்ததால் நவுறுவில் நடைபெற்றுவந்த நேர்முகத் தேர்வுகளை அமெரிக்க அதிகாரிகள் இடைநிறுத்திவிட்டதாக Reuters செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இதனை மறுத்துள்ள வெளிவிவகார அமைச்சர் Julie Bishop, எவ்வித தடங்கலுமின்றி புகலிடக்கோரிக்கையாளர்கள் நேர்முகத் தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள சரத்துக்கள் பற்றி தொடர்ந்தும் பேச்சுக்கள் நடைபெறுவதாகவும், புதிய அமெரிக்க அதிபர் Trump இந்த ஒப்பந்தத்தை மதித்து நடப்பார் என்பதையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் Julie Bishop கூறியுள்ளார்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now