SKIP TO MAIN CONTENT

புகலிடக்கோரிக்கையாளர்: மானுஸ் முகாம் மூடல் ஆரம்பம்

சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார்களா? முகாமில் தங்கியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அடுத்து என்ன நடக்கும்? மானுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்படுவது படிப்படியாக ஆரம்பமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cc
Manus Island Source: AAP

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

இவ்வருட அக்டோபர் 31ம் திகதியுடன் முற்றுமுழுதாக மூடப்படவுள்ள முகாமின் சில பகுதிகள் அதற்கு முன்பாகவே படிப்படியாக மூடப்படவுள்ளதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.

இதனிடையே, Manus முகாமில் உள்ள ஒரு பகுதி வருகிற ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்றும் மற்றைய சில பகுதிகளை பகுதிகளை ஜூன் 30 ம் தேதியுடன் மூடவுள்ளதாகவும் கூறப்படுகிறது, மற்ற பகுதிகளை ஜூன் 30 ம் தேதி மூடவுள்ளதாகவும் பப்புவா நியூ கினி குடிவரவு அதிகாரிகள் திங்களன்று அகதிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு தங்கியுள்ளோரில் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் பிறிதொரு தற்காலிக முகாமுக்கு (transit centre) மாற்றப்படவுள்ளதாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

அம்முகாமிலுள்ள அகதிகளில் அமெரிக்காவில் மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருப்போரில் சிலர் தீவின் பிரதான நகரத்திற்கு அருகில் உள்ள கிழக்கு லொரேங்கே முகாமில் தங்கவைக்கப்படவுள்ளதாக அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மீள்குடியேற்ற உடன்படிக்கையின் கீழ் எடுக்கப்படாத அகதிகளை PNG இல் குடியேற்ற இருப்பதாகவும், அதேவேளை அகதிகளாக அடையாளம் காணப்படாதவர்கள் தமது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாகவும் குடிவரவு அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

"We've been consistent in the message that people will not settle here," he told 3AW on Tuesday.

The Manus Island complex was slated for closure on October 31, after PNG's Supreme Court ruled it illegal last yar.

Human rights groups and the United Nations have criticised the camp's cramped conditions, inadequate medical facilities, and violence, with activists renewing calls for the centre to be immediately shut down in recent months.

News of the planned closure came after Amnesty International released its report into the Good Friday shooting at the centre.

The human rights group said verified footage and images confirmed bullets were fired directly into the camps during the rampage, contradicting initial claims made by Australian immigration officials and PNG police suggesting soldiers only fired bullets into the air.

Mr Dutton has repeatedly said PNG soldiers opened fire on the centre because they were concerned about the welfare of a young boy who was allegedly led into the compound.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now