சுவிஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான 13 பேரும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உதவியமை, போலியான ஆவணங்களைத் தயாரித்தமை, பணமோசடியில் ஈடுபட்டமை மற்றும் கப்பம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 12 தமிழர்கள் மற்றும் ஒரு ஜேர்மன் பிரஜை ஆகியோர் மீது கடந்த 2009ம் ஆண்டு வழக்குத் தாக்கல்செய்யப்பட்டிருந்தநிலையில் குறித்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இதன்படி குற்றச்சாட்டுக்குள்ளான 13 பேரில் ஐவர் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்ட அதேநேரம் வழக்கிற்கு அவர்கள் செலவழித்த பணம் நஷ்டஈடாக கொடுக்கப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் ஏனையவர்கள் நிதிசம்பந்தமான சில குற்றச்சாட்டுக்களை இன்னமும் எதிர்கொள்கின்றபோதிலும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிதிசேகரிப்பு மற்றும் நிதிவிநியோகத்தில் ஈடுபட்ட World Tamil Coordinating Committee (WTCC) அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல எனவும் சுவிஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
