பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட 12 உயரதிகாரிகள் உட்பட 48 உத்தியோகத்தர்களை தமது நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் பணி நீக்கம் செய்துள்ளதாக Google நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் நீண்ட காலமாக நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்ற தகுதியை பெற்றிருந்தபோதிலும் அவர்கள் வெளியேற்றப்படும்போது எந்த பணப்பொதியும் (Exist Package) வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் பிச்சை அவர்கள் இது குறித்து கூறும்போது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை புரிகின்றவர்கள் விடயத்தில் தமது நிறுவனம் தயவு தாட்சண்யம் பாராது என்றும் உத்தியோகத்தர்களின் தகுதி - அனுபவம் என்பவை குறித்து எந்த பாகுபாடும் காண்பிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
