SKIP TO MAIN CONTENT

பாம்புகளைத் தபாலில் அனுப்பியவரைக் காவல்துறையினர் தேடுகின்றனர்

NSW Police
Source: NSW Police

1 min read

Published



Skip to article content

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பாம்புகளை தபாலில் அனுப்ப முற்பட்ட நபரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸின் Lake Macquarie தபால் நிலையத்திலிருந்த பொதி ஒன்றினுள்  1.2மீட்டர் நீளமுள்ள பாம்பு உட்பட 3 பாம்புகள் பொதிசெய்யப்பட்டிருந்ததை அவதானித்த ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்திருந்தனர்.

இவை என்ன வகை பாம்புகள் என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் CCTV  காணொளிப் பதிவுகளை வைத்து விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 1800 333 000 என்ற இலக்கத்தில் Crime Stoppers ஐத் தொடர்பு கொள்ளலாம்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now