SKIP TO MAIN CONTENT

பெண்களுக்கு மாரடைப்பு இதனால் வரும்!

மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை அல்ல எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

Heart
Heart Source: Wiki Commons

2 min read

Published

Updated

By Maheswaran Prabaharan



Skip to article content

மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை அல்ல எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறிப்பாகப் பெண்களுக்குரிய மாரடைப்புக்கான அறிகுறிகள் கண்டறிவதற்கு மிகவும் கடினமானவை. பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை எழு விதமான முன்னெச்சரிக்கைகள் மூலம் முன்கூட்டியே ஓரளவு அறிந்துகொள்ளலாம். 

1. களைப்பு (Fatigue)

70 வீதமான பெண்களுக்கு, மாரடைப்பு வரப் போவதற்குரிய அந்தக் குறிப்பிட்ட மாதத்தில் மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கும். தமது அன்றாட வேலைகளைச் செய்யமுடியாமல் சோர்ந்து போய்க் காணப்படுவர்.

2. Insomnia (தூங்க முடியாமை)

மிகவும் களைப்பான சோர்வான நிலையிலும், தூங்க முடியாத ஒரு நிலை காணப்படும். தூக்கம் வருவது போல் தென்படும் ஆனால் நித்திரை கொள்ள முடியாத ஒரு இயலாமையான நிலை.

3. கவலை மற்றும் மன அழுத்தம்(Anxiety and stress)

கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் மாரடைப்புக்கான ஒரு பொதுவான ஆனால் மிகவும் அபாயகரமான காரணிகள் ஆகும். ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்னர் பெண்கள் வழக்கத்தை விட மிகவும் உணர்சிவசப்பட்டவர்கள் (emotional) போலக் காணப்படுவார்கள்.

4. சமிபாடில்லாத தன்மை (அஜீரணம் அல்லது குமட்டல்) (Indigestion or nausea)

வயிற்று வலி, குடல் பிடிப்புகள், குமட்டல், மற்றும் சமிபாடில்லாத தன்மை என்பன அதிகம் காணப்படும்.

5. மூச்சுச் திணறல் (Shortness of breath)

சாதாரண தினசரி வேலைகளைச் செய்யும் போதும் மாடிப் படிகளில் ஏறும் போதும் மிகவும் களைத்து, விரைவான அல்லது அதிகப்படியான மூச்சு விடுதல்கள் ஏற்படும். 

6. ஈரமாக வியர்வை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் (Flu-like symptoms)

மிகவும் ஈரமாக வியர்வை வந்தவண்ணமிருக்கும். அத்துடன் காய்ச்சல் போன்ற தன்மை மற்றும் தலைச்சுற்றும் காணப்படும். 

Cold sweat is common among women who are having a heart attack. It will feel more like stress-related sweating than perspiration from exercising or spending time outside in the heat.

7. தாடை, காது, கழுத்து, முதுகு அல்லது தோள்பட்டை வலி (Jaw, ear, neck, back or shoulder pain)

பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னர், சில நாட்களாக அவர்களின் தாடை, காது, கழுத்து, முதுகு, தோள்பட்டைப் பகுதிகளில் வலி அல்லது இறுக்க நிலை காணப்படும். சில வேளைகளில் அவ்விடங்களிலுள்ள தசைப் பகுதிகளில் ஒருவித இழுப்புத் தன்மை தோன்றும்

Chest pain-squeezing or fullness, and the pain can be anywhere in the chest, not just on the left side.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now