கிருமிநாசினியான வேப்பிலை, வெகுவிரைவில் Prostate Cancer-ஆண் சுரப்பிப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆண் சுரப்பியில் புற்றுநோய்க் கட்டி Prostate Tumor உண்டானால் அதன் அளவை 70 வீதம் வரையும், அதன் பரவலை 50 வீதம் வரையும் குறைக்கக்கூடிய சக்தி வேப்பிலைக்கு உள்ளதாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறனர்.
தொடர்ந்து 12 வாரங்களுக்கு Nimbolide எனப்படும் வேப்பிலையிலிருந்து பெறப்படும்இரசாயனப் பொருளை உட்கொண்டுவருவதன் மூலம் ஆண் சுரப்பிப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம் என தமது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து Nimbolide-இன் பக்கவிளைவுகள் பற்றிய பரந்துபட்ட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
