பிரிஸ்பேர்னிலுள்ள Middle Park ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் 182 மாணவர்கள் மற்றும் 15 ஊழியர்களுக்கு Flu தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பாடசாலை இன்று மூடப்பட்டது.
சுமார் 600 பேர் கல்விகற்கும் இப்பாடசாலையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்களுக்கு Flu ஏற்பட்டுள்ளதால், மற்றவர்களுக்கும் இது பரவாதவண்ணம் பாதுகாப்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலும் குறித்த பாடசாலை இன்று மூடப்பட்டது.
இதேவேளை இச்சம்பவம் அசாதாரணமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாடசாலை முழுவதும் தொற்றுநீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நோய்வாய்ப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் அவர்களுக்கு influenza A and B தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
