SKIP TO MAIN CONTENT

பெர்த்தில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது!

Police tape restricts access to a crime scene
Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மனைவியை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட சிங்கள நபர் ஒருவர் பெர்த் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெர்த்தின் Danehill Way பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் 44 வயதான பெண் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்த் நகரில் Danehill Way பிரதேசத்தில் இவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அவசர சேவைப்பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு விரைந்து சென்ற அவசர சேவைப்பிரிவினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்துள்ளனர். ஆனால். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பெர்த் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிணை அனுமதியற்ற தடுப்புக்காவலில் தற்போது அவர் உள்ளார் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபருக்கு எதிராக பொலீஸார் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now