பொருத்தமான வங்கிக் கணக்கை தெரிவுசெய்யுங்கள்!

Banking piggy

Source: AAP

 ஆஸ்திரேலியாவில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஒன்று தேவை.

ஆனால் எந்த வங்கியில் எப்படியான வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் இங்கு புதிதாக குடியேறிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.

சம்பியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ரொபேர்ட்டிற்கு அப்படித்தான் இருந்தது. இங்கு புழக்கத்திலிருக்கும் பலவிதமான பண கொடுப்பனவு முறைகள் இவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாக சொல்கிறார்.

ஒவ்வொருவரும் தமக்கான வங்கிக் கணக்கை வைத்திருப்பது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்ற ஒன்று என்கிறார் Australian Bankers’ Associationஇன் நிறைவேற்று அதிகாரி Diane Tate.

உலகில் வங்கிச் சேவையில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பதால் வரவு செலவுகளை இலகுவாகக் கையாள முடியும் என்கிறார் Diane Tate.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை ஆகிய ANZ, Westpac, Commonwealth, NAB 4 வங்கிகளின் ஆதிக்கம் தான் அதிகளவில் காணப்படுகின்றது. ஆனால் இவற்றை விடவும் இன்னும் பல சிறிய மற்றும் பெரிய வங்கிச் சேவைகளும் இருக்கின்றன.
Bank
Source: SBS
இதேவேளை ஒருவர் தனக்கான வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது மிகவும் இலகு. ஆனால் இதற்கு உங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் தேவைப்படும்

உங்களுக்கான வங்கிக் கணக்கை கைத்தொலைபேசி வழியாகவோ இணையத்தளம் வழியாகவோ அல்லது வங்கி ஒன்றுக்கு நேரில் சென்றோ ஆரம்பிக்கலாம்.

நேரில் செல்வதன் மூலம் தேவைப்படும் விண்ணப்ப படிவங்களில் உடனடியாகவே கையெழுத்திட முடியும் என்பதுடன் தேவையான விபரங்கள் மற்றும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் போது அதற்கான சேவைக்கட்டணம் உள்ளிட்ட விடயங்களை வங்கிகள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

அதேநேரம் ஓய்வூதியம் பெறுகின்றவர்கள் உட்பட சிலருக்கு வங்கிக்கணக்கை இலவசமாக பேணுவதற்கான வசதிகளை சில வங்கிகள் வழங்குவதுண்டு என்கிறார் Australian Bankers’ Associationஇன் நிறைவேற்று அதிகாரி Diane Tate.

வங்கிக்கணக்கில் சேமிப்பினைச் செய்பவர்களுக்கு பல்வேறு கூடிய வட்டிவீதம் உள்ளிட்ட சலுகைகளையும் வங்கிகள் வழங்குவதுண்டு.
Bank
Source: SBS
இதேவேளை ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக குடிபெயர்ந்தவர்கள் வங்கிக் கணக்கு விடயத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள்வது சிறந்தது என்கிறார் Liverpool Migrant Resources Centre ஐச் சேர்ந்த Olivia Nguy.

குறிப்பாக தனிப்பட்ட வங்கிகணக்கிற்கான பாஸ்வேர்ட் போன்றவற்றை இரகசியமாக வைத்திருக்க வேண்டுமென Olivia Nguy வலியுறுத்துகிறார்.

அதேநேரம் இங்கு புதிதாக குடியேறியவர்கள் கடனட்டைகள் பற்றியும் அதற்கான மாதாந்த கொடுப்பனவு பற்றியும் போதிய தெளிவில்லாததால் பெரும் கடன் சுமைக்குள் சிக்குவதை Olivia Nguy சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனட்டை விவகாரம் எப்படிக் கையாளப்படுகின்றதென்பதை தமது வாடிக்கையாளர்களுக்குவங்கிகள் தெளிவாகச் சொல்லாமையும் இதற்கு ஒரு காரணமென்கிறார் Olivia Nguy.

நாம் முன்பு குறிப்பிட்ட நம்பியாவிலிருந்து வந்த ரொபேரட் தனக்கான வங்கிக் கணக்கை ஆரம்பித்து அதை வெற்றிகரமாகப் பேணி வருவதா மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

வங்கிக்கணக்கினைப் எப்படி திறம்பட்ட விதத்தில் பேணலாம் என்பதற்கான விபரங்களை The Australian Securities and Investment Commission (ASIC)இன் www.moneysmart.gov.au என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 


Share

Published

By Wolfgang Mueller
Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand