SKIP TO MAIN CONTENT

பூர்வகுடிகள் 65,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியா வந்துவிட்டார்கள்

AAP
Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T


Skip to article content

65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான புதிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின்  Northern Territory-யில் உள்ள Kakadu தேசிய பூங்காவுக்கு அருகிலுள்ள கற்குவியல் மற்றும் குகைகள் அமைந்துள்ள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லாலான கோடரி, தீ மூட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் நெருப்பு மூட்டப்பட்ட இடங்கள் போன்றவற்றை வைத்து 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியாவுக்கு பூர்வகுடிகள் வந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள் 47,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருக்கலாம் என கருதப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்புதிய ஆய்வு  முடிவு இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now