SKIP TO MAIN CONTENT

பூர்வகுடிகள் ஐந்துபேர் படகு மூழ்கி பரிதாபமாக பலி?

Police search the area.
Police search the area. Source: Queensland Police

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் வாழும் Torres Strait பகுதி கடலில் இரண்டு தீவுகளுக்கு இடையில் படகில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காணாமல்போயுள்ளனர்.

இவர்களது படகு மீட்கப்பட்டுள்ளபோதும் பயணம் செய்த எவரையும் நான்கு நாட்களாக கண்டுபிடிக்கமுடியவில்லை.

கடல்வழியாகவும் வான் வழியாகவும் தங்களது தேடுதல் பணிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த மீட்புப்படையினர் குறிப்பிட்ட குடும்பத்தின் உறவினர்களிடம் தாங்கள் தேடுதல் பணியை நிறுத்துவதாகவும் காணாமல்போனவர்கள் உயிருடனிருப்பதற்கான சாத்தியமில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

Badu தீவிலிருந்து Dauan தீவுக்கு கடந்த 31 ஆம் திகதி படகில் புறப்பட்டு சென்றவர்களுக்கே இந்த கதி நேர்ந்துள்ளது.

உயிரழந்தவர்களாக கருதப்படுபவர்களில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் ஒன்பது வயது சிறுவனும் அடங்குவர்.

நான்கு நாட்களாக தாங்கள் நடத்திய தீவிர தேடுதலில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் துயரம் நிறைந்த செய்தியை கூறியிருப்பதாக மீட்புப்படை பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now