சிட்னி Harbour Bridge-இல் ஆஸ்திரேலிய மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில கொடிகளுடன் சேர்த்து Aboriginal flag-பூர்வ குடியின மக்களின் கொடியை நிரந்தரமாகப் பறக்க விடவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென இணையம் மூலமாக நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆஸ்திரேலிய முதற்குடிகளை அங்கீகரிக்கும் வகையில் Harbour Bridge-இல் மூன்றாவது கொடியாக பூர்வகுடியினத்தவர்களின் கொடியை நிரந்தரமாக இடம்பெறச் செய்வதற்கு நியூசவுத்வேல்ஸ் மாநில அரசும் நாடாளுமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த கையெழுத்து வேட்டையை ஏற்பாடு செய்திருந்த Cheree Toka தெரிவித்தார்.
