வீட்டு வைத்தியம் அல்லது இயற்கை வைத்தியம் நம்மத்தியில் எந்தளவு பிரபலமோ, அதேபோன்று பூர்வகுடியினத்தவர்களும் இயற்கை வைத்தியத்தை ஆண்டாண்டு காலமாக பின்பற்றிவருகின்றனர்.
குறிப்பாக இவர்கள் பயன்படுத்தும் 10 இயற்கை மருந்துகளைப் பார்ப்போம்.
1. Gumbi Gumbi

இந்தத் தாவரம் இருமல், சளி, எக்ஸிமா, தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுதல், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல், சிலவகை புற்றுநோய்கள், மனநல பிரச்சினைகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்தப்படுகின்றது.
2. Lemon Grasses

இது சாதாரணமாக ஆசியக் கடைகளில் விற்பனைசெய்யப்படும் Lemon Grasses-இலிருந்து வேறுபட்டது.
இத்தாவரம் இருமல், தொண்டை நோவு, வயிற்றோட்டம், சளி போன்றவற்றுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகின்ற அதேநேரம் தோல் நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
3. Tea Tree

பூர்வகுடியினத்தவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதுமே இதிலிருந்து தயாரிக்கப்பட்ட பல பொருட்கள் விற்கப்படுகின்றன. மிக முக்கியமான தொற்றுநீக்கியாக பயன்படுத்தப்படுவதுடன் சளி, தலைவலி மற்றும் தோல்நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
4. Kakadu Plum/Billy Goat Plum

வைட்டமின் சி உட்பட பல கனியுப்புக்கள் அடங்கிய இப்பழம் முதுமையைத் தள்ளிப்போடவும் பயன்படுத்தப்படுகின்றது.
5. Kangaroo Apple

இந்தப்பழம் இயற்கை வலிநிவாரண மாத்திரையாக பார்க்கப்படுகின்றது. மூட்டுநோ, தோலிலுள்ள தழும்புகள், காயங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
6. Emu Bush

வயிற்றோட்டம், சளி, தலைவலி, நெஞ்சுவலி போன்றவற்றுக்கு மருந்தாகவும் பூர்வகுடியினத்தவர்களின் சில சடங்குகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.
7. Eucalyptus

இத்தாவரம் நமக்கும் மிகப்பரிச்சயமான ஒன்று. இதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் தொற்றுநீக்கி முதல் சுவாசக்கோளாறுகளுக்கான சிகிச்சை வரைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
8. Snake Vine

இது பூர்வகுடியினத்தவர்கள் மத்தியில் பயன்படும் மிகமுக்கியமான தொற்றுநீக்கி மற்றும் வலிநிவாரணியாகும்.
9. Witchetty Grub

புரதச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த இந்தப்புழு காயங்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றது.
10. Umbrella Bush Wattle

இத்தாவரம் இருமல், சளி, தொண்டைநோவு, தலைசுற்றல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
