ஒருவர் ஒரு வங்கியில் கணக்குவைத்துக்கொண்டு இன்னொரு வங்கியின் ATM இயந்திரம் மூலம் பணத்தை எடுக்கும்போது தற்போது $2 கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. இதன்மூலம் Commonwealth Bank, ANZ, Westpac, NAB எனும் நான்கு பெரிய வங்கிகளும் பெருமளவு லாபம் சம்பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டு பலகாலமாக இருந்துவருகிறது.
இந்த பின்னணியில் இனிமேல் தமது வங்கிக்குரிய ATMயில் பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தால் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்று Commonwealth Bank அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமது வங்கிக்குரிய ATMயிலும் பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தால் தாங்களும் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்று உடனடியாகவே ANZ, Westpac, NAB வங்கிகளும் அறிவித்துள்ளன. பிற முக்கிய வங்கிகளும் இதுபோன்ற அறிவிப்பினை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற வங்கிகளின் ATM இயந்திரம் மூலம் ஆண்டுக்கு 25 கோடி பணபரிமாற்றம் நடப்பதாக கணக்கிடப்படுகிறது.
