மோசமான மோசடி வழக்குகளில் ஒன்றான $165 மில்லியன் டாலர் மோசடி வழக்கில் ஆஸ்திரேலிய வரித்திணைக்கள அதிகாரிகளில் ஒருவர் சம்பந்தப்பட்ட சம்பவம் உட்பட்ட பல காரணங்களினால் ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்தின் மதிப்புக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.
தனது நற் பெயரை மீண்டும் நிலைநாட்ட ATO பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பிறரின் வருமானப் பதிவுகளை சட்டவிரோதமாக அணுகியதாக ஊர்ஜிதம் செய்யப்பட்ட தமது 12 ஊழியர்களைத் தாம் இந்த வருடம் பணிநீக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய வரித்திணைக்கள ஆணையர் Chris Joradan தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியர்களின் வரி ஆவணங்களை அங்கீகாரமின்றி அணுகிய சுமார் 30 ATO ஊழியர்கள் கடந்தவருடம் சிக்கியுள்ளனர். அதில் 23 பேர் உடனடிப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் இவ்வருடம் இது வரை 12 பேர் வேலை இழந்துள்ளனர்.
"The stupidity -- they all know, or should know, that they're monitored, right? So they're picked up. And out of 20,000 people, you get 23 who have a look at something ... There's humans, right?"
இது ஒருபுறமிருக்க, சட்டவிரோத வணிக நடைமுறையில் ஈடுபட்டுள்ள பலரைக் கண்டறியும் தீவிர நடவடிக்கையிலும் வரித்திணைக்களம் போலீசாருடன் இணைந்து ஈடுபட்டுள்ளது. இங்கு சிலர் தொழில்களை ஆரம்பித்து, வங்கிகளில் கடன்களை பெற்றுப் பின்னர் தமது வியாபாரங்களை மூடிய பின்னர், வேறொரு பெயரில் பிறிதொரு வியாபாரத்தை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் பல நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தொழில் நிறுவனமொன்றின் இயக்குனராவது மிகவும் இலகுவான விடயமெனத் தெரிவித்துள்ளார் Commissioner Jordan
"This was a father misguidedly, with a huge error of judgment, trying to find out some information for his son. Michael Cranston is not being considered for conspiracy to defraud the Commonwealth."
ஒரு நபர் நிறுவன இயக்குனராக உரிமம் பெறுவதற்கு 100-point identification check - அடையாள முறைமை அறிமுகப்படுத்தப்படல் விடுமென்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
"Well, right now, it's tougher to open a bank account than to become a company director. One expert said that it is almost so easy, you could register your dog as a company director."
