SKIP TO MAIN CONTENT

போதைப்பொருள் பாவனையில் உலகளவில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம்!

Cocaine
Research suggests Australians are consuming record levels of cocaine. Source: AAP

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

உலகளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையில் ஆஸ்திரேலியா இரண்டாமிடம் வகிப்பதாக Australian Criminal Intelligence Commission அறிக்கை தெரிவிக்கின்றது.

சுமார் 13 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றைப் பரிசோதித்ததன் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை ஆய்வில் 24 நாடுகள் உட்படுத்தப்பட்டநிலையில் அமெரிக்கா முதலிடத்திலும் ஆஸ்திரேலியா இரண்டாமிடத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியர்கள் ஆண்டொன்றுக்கு 8.4 தொன் ஐஸ், 3 தொன் கொக்கெய்ன், 1.2 தொன் ecstasy மாத்திரை மற்றும் 756 கிலோ ஹெரோயின் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த ஹெரோயின் பாவனையில் 348 கிலோ ஹெரோயின் விக்டோரியா மாநிலத்தில் வாழ்பவர்களால் உட்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம் கொக்கெய்ன் பாவனையாளர்கள் சிட்னி மற்றும் கன்பராவில் அதிகளவில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now