SKIP TO MAIN CONTENT

புதிதாக அறிமுகமாகும் மருந்தின் விலை 3 மில்லியன் டொலர்கள்!

Zolgensma
Spinal muscular atrophy drug Zolgensma will cost more than $US2 million for each one-off treatment. (AAP) Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

Spinal muscular atrophy நோய்நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவென கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தே உலகின் மிக விலை உயர்ந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு மரபணு சிகிச்சைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள Zolgensma-வின் விலை 3 மில்லியன் டொலர்களாகும்.

சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான Novartis இதனைத் தயாரித்துள்ளது.

இம்ருந்தினை Spinal muscular atrophy-ஆல் பாதிக்கப்பட்ட இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளில் பயன்படுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் தயாரிப்பு நிர்வாக அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரு குழந்தைக்கு Spinal muscular atrophy இருப்பது முதலிலேயே அடையாளம் காணப்பட்டால் அக்குழந்தை  பிறந்தவுடனே இம்மருந்தினைக் கொடுக்கும் போது நோய்த்தாக்கத்தை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கான சிகிச்சைகளுக்கென வருடந்தோறும் பல லட்சம் டொலர்களை செலவழிப்பதற்குப் பதில் ஒரேதடவையில் சிகிச்சைபெற்று குணமடையக்கூடிய வாய்ப்பினை வழங்கும் Zolgensma-வைப் பெறுவதில் பாரிய அனுகூலம் உள்ளதாக Novartis நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் முழுத்தொகையையும் திரும்பக் கொடுப்பதற்கு குறித்த மருந்து தயாரிப்பாளர்கள் இணங்கியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now