SKIP TO MAIN CONTENT

புத்தாண்டு தீர்மானங்கள் பத்து

நாளை பிறக்கவுள்ள 2018ம் ஆண்டில், அநேகமானோர் எடுத்துள்ள மிகப் பிரபலமான பத்து புதுவருடத்தீர்மானங்கள் எவை எனத் தெரியுமா? உங்களின் புதுவருடத் தீர்மானங்கள் அதாவது New Year resolutions ஐ நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களா?

cc
Source: Getty

2 min read

Published

By Praba Maheswaran


Skip to article content

பொதுவாக, கடந்த 12 மாதங்களில் எமது பழக்கவழக்கங்களின் பிரதிபலிப்பே நமது அடுத்தவருடத் தீர்மானங்களாக இருக்கும். பெரும்பாலான மக்கள் தாங்கள் விரும்பிய விஷயங்களை அடைவதற்கு உறுதியுடன் இருப்பர், ஆனால் சில பல காரணங்களால் அவர்களால், அவர்களது இலக்குகளை  நோக்கி வேலை செய்ய முடியாமல் போயிருக்கலாம். இதேவேளை நாம் எடுக்கும் தீர்மானங்களில் தொடர்ந்து எவ்வளவு காலம் நிலைத்திருக்க முடியுமென்பதும் கேள்விக்குறியே.

ஆஸ்திரேலியாவில் பலர் புதுவருடத் தீர்மானங்கள் எடுப்பதாகத் தெரியவந்துள்ளது. அதில் அவர்கள் எடுக்கும் பொதுவான, பிரபலமான  தீர்மானங்கள் எவை தெரியுமா?

1. எடை குறைப்பு (Getting Organised) - இது உலகளாவிய ரீதியிலான ஒரு பொதுவான தீர்மானமாக இருப்பது நோக்க்கத்தக்கதாகும்.

2. செய்யவேண்டியவற்றை திட்டமிழல் அல்லது ஒழுங்குமுறைப்படுத்துதல்.(Getting Organised)

3. பணத்தை சேமித்து, களியாட்டம், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துதல் (Saving money and curbing extravagant, unnecessary spending)  

4. வாழ்க்கையை முற்று முழுதாக அனுபவித்து மகிழ்தல் (Enjoying life to the fullest) - நிச்சயமாக மேலுள்ள 3வது தீர்மானம் எடுத்தவர்கள் இத்தீர்மானத்தை எடுத்திருக்க முடியாது.

5. உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல் (Staying fit and healthy) - இது முதலாவது தீர்மானத்துடன் ஓரளவு ஒத்துப்போனாலும் அதிகமானவர்கள் தீர்மானிப்பது எடைக்குறைப்பாகும், ஏனெனில் பொலிவாக உடலை வைத்திருந்தால் அழகும் அதிகமெல்லவா!!

6. மனதுக்கு அற்புதமானவொன்றைக் கற்கவேண்டும் (Learn something exciting)

7. புகைப்பிடிப்பதை நிறுத்துத்தவேண்டும் - உடனடியாகச் செய்யவேண்டிய ஓன்று.

8. பிறருக்கு உதவுதல் (Help others)

9. காதல் வயப்படவேண்டும் (Fall in love)

10. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டால் (spend more time with family)

நீங்கள் எண்ணுவதை விட அதிகமானவர்கள் இந்தத் தீர்மானங்களை ஒத்திவைக்காமல் கடைப்பிடிக்கிறார்கள் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. Statistic Brain Research Institute ஆராய்ச்சிகளின்படி, சுமார் 76% மக்கள் முதல் வாரத்தில் தமது தீர்மானங்களை சரியாக கடைப்பிடிப்பதாகவும், ஆறுமாதங்களில் இது 46%மாகக் குறைவதாகவும் கூறப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now