பிரதமர் Scott Morrison தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார்.
கடந்த அமைச்சரவையிலிருந்து பெரியளவில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாத பிரதமர் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார்.
குறிப்பாக 7 பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பாக இருந்த Melissa Price அதிலிருந்து நீக்கப்பட்டு பாதுகாப்புதொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்முறையாக பூர்வகுடிகள் விவகாரங்களுக்கான அமைச்சராக பூர்வீக பின்னணி கொண்ட Ken Wyatt நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை செனட்டர் Arthur Sinodinos அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அதேநேரம் செனட்டர் Mitch Fifield ஐ.நாவுக்கான ஆஸ்திரேலிய பிரதிநிதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Scott Morrison அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய துறைகளுக்கான அமைச்சர்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Prime Minister Scott Morrison- Public Service
Peter Dutton- Home Affairs
Alan Tudge- Population, Cities & Urban Infrastructure
Christian Porter- Industrial Relations
Michaelia Cash- Employment, Skills and Family Business
Angus Taylor- Energy & Emissions Reduction
Linda Reynolds- Defence
Sussan Ley- Environment
Bridget McKenzie- Agriculture
David Littleproud- Water resources, Natural disasters & emergency management
Josh Frydenberg- Treasurer
Marise Payne- Foreign Minister & Minister for Women
Mathias Cormann- Finance
Greg Hunt- Health
Dan Tehan- Education
Simon Birmingham- Trade, Tourism & Investment
Paul Fletcher- Communication, Cyber Safety & the Arts
