மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள அகதிகளை மருத்துவ தேவைகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள சட்ட சீர்திருத்தத்தின் அடிப்படையில் அகதிகள் அனைவரும் எதிர்வரும் வாரங்களில் மருத்துவ தேவையை காரணம்காட்டி ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிடுவார்கள் என குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்திருத்தத்தின் பிரகாரம், மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் இரண்டு மருத்துவ நிபுணர்கள் நிலைகொண்டிருந்து அங்குள்ள அகதிகளின் மருத்துவ ரீதியான விண்ணப்பங்களை பரிசீலித்து குறிப்பிட்ட அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கான கோரிக்கையை குடிவரவு அமைச்சரிடம் அனுப்பிவைப்பர். அந்த கோரிக்கைகளை 24 மணி நேரத்தில் பரிசீலிக்கவுள்ள குடிவரவு அமைச்சர் அதற்கு பதிலை வழங்குவார்.
மருத்துவ நிபுணர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதற்கு எதிரான மேன் முறையீடு செய்வதற்கான சுயாதீன நிபுணர் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என்றும் இல்லாவிட்டால், அனுமதியளிக்கப்படுகின்ற அகதிகள் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவர் என்றும் குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.
