SKIP TO MAIN CONTENT

புதிய கண்டுபிடிப்பு: சிட்னி -லண்டன் பயண நேரம் நான்கரை மணித்தியாலங்களாக குறைகிறது?

Reaction Engines
Source: Reaction Engines

1 min read

Published

Updated


Skip to article content

பிரித்தானிய விமானப்பொறியியலாளர்களினால் உருவாக்கப்படுகின்ற புதிய hypersonic-விமான இயந்திர தொழில்நுட்பத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கும் லண்டனுக்குமான பயண நேரம் நான்கரை மணித்தியாலங்களாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Synergetic Air Breathing Rocket Engine என்ற இந்தப்புதிய தொழில்நுட்பத்துடன்கூடிய அதிவேக பறப்பு இயந்திரத்தினை விமானங்களில் பொருத்துவதன் மூலம் பாரம்பரிய பறப்பு இயந்திரங்களைவிட பலமடங்கு வேகத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள Reaction Engines நிறுவனம் தெரிவித்துள்ளது.

பரீட்சார்த்த சோதனைகள் நிறைவடைந்தவுடன் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு பயணிகள் விமானங்களில் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புதிய தொழினுட்பத்தின் மூலம் லண்டனுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையிலான பறப்பு நேரம் வெறும் ஒரு மணி நேரமாக குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now