SKIP TO MAIN CONTENT

புதிய கருத்துக்கணிப்பு முடிவிலும் ஆளுங்கட்சி தொடர்ந்தும் பின்னடைவு!

A file image of Mr Turnbull
Source: AAP

1 min read

Published

Presented by Renuka Thuraisingham


Skip to article content

பிரதமர் Malcolm Turnbull-இன் தலைமைத்துவப் பதவிக்கு உள்துறை அமைச்சர் Peter Dutton சவால் விடுக்கக்கூடும் என பரவலாகப் பேசப்படும் நிலையில், இன்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் ஆளும் கூட்டணி அரசுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Fairfax/Ipsos  வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவின்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசைப் பின்தள்ளி 55 க்கு 45 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் கூட்டணி அரசின் முதன்மை வாக்குகளும் 39 இலிருந்து 33 வீதமாக குறைவடைந்துள்ளது.

மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக Malcolm Turnbull அவர்கள் 48-36 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றபோதும் இவருக்கான ஆதரவு 9 வீதத்தால் குறைவடைந்துள்ள அதேநேரம் எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-க்கான ஆதரவு 6 வீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

National Energy Guarantee என்ற தேசிய எரிசக்தி உத்தரவாத திட்டத்திற்கு ஆளுங்கட்சி அங்கத்தவர்கள் மத்தியிலேயே பொது இணக்கப்பாட்டிற்கு வரமுடியாததையடுத்து, பிரதமரின் தலைமைத்துவப் பதவிக்கு உள்துறை அமைச்சர் Peter Dutton சவால்விடுக்கக்கூடும் என செய்திகள் வெளியாகியுள்ள பின்னணியில் இக்கருத்துக்கணிப்பில் அரசுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் Malcolm Turnbull-இன் தலைமைத்துவத்திற்கு அமைச்சர் Peter Dutton உட்பட அனைவரினதும் ஆதரவு உள்ளதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர் Christopher Pyne தெரிவித்துள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now