SKIP TO MAIN CONTENT

போதையில் வாகனமோட்டிய லிபரல் எம்.பி. பதவி விலகுவதாக அறிவிப்பு!

Some motorists who are caught driving over the blood alcohol limit may avoid losing their licences, while others may receive on-the-spot fines in NSW
Image for representation only. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

போதையில் வாகனமோட்டி பொலீஸாரிடம் அகப்பட்ட விக்டோரிய மாநில லிபரல் கட்சி சட்ட மன்ற உறுப்பினர் Simon Ramsay தனது தவறுக்கு பொறுப்பெற்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை உள்ளூர் உதைபந்தாட்ட போட்டியொன்றுக்கு சென்றுவிட்டு வீதியின் பிழையான வழியொன்றின் ஊடாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மேற்கு விக்டோரியாவிற்கான லிபரல் சட்டமன்ற உறுப்பினர் Simon Ramsay-யை பொலீஸார் மறித்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவர், அனுமதிக்கப்பட்ட போதையின் அளவிலும் பார்க்க நான்கு மடங்கு மது அருந்தியுள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

இந்த தகவல் வெளியான பின்னர், Ramsay தனது அரசியல் எதிர்காலம் குறித்து உடனடியாக முடிவெடுக்கவேண்டும் என்று விக்டோரிய மாநில எதிர்க்கட்சி தலைவர் Matthew Guy கூறியிருந்தார்.

இதனையடுத்து தனது பதவி விலகலை அறிவித்துள்ள Ramsay, தனது தவறுக்கு மன்னிப்புக்கோருவதாக தெரிவித்துள்ளார்.

போதையில் வானகமோட்டியதற்காக ராம்சேயிற்கு எதிராக பொலீஸார் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்கள். அநேகமாக அவரது சாரதிப்பத்திரம் இரண்டு வருடங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now