SKIP TO MAIN CONTENT

போதையில் விமானத்தில் அடிதடி: ஆஸி. அழகிக்கு அமெரிக்காவில் சிறை!!

File: A United Airlines airplane takes off.
File: A United Airlines airplane takes off. Source: Getty Images

1 min read

Published

Presented by Renuka


Skip to article content

மதுபானம் தருமாறு கேட்டு விமானப்பணியாளர்களை தாக்கிய ஆஸ்திரேலிய அழகியை குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

மெல்பேர்னிலிருந்து லொஸ் ஏன்ஜல்ஸிற்கு சென்றுகொண்டிருந்த அமெரிக்க விமானசேவையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சூடானை பூர்வீகமாகக்கொண்ட Adau Akui Atem Mornyang என்ற 24 வயது அழகியே இவ்வாறு அட்டகாசம் செய்து சிறைத்தண்டனையை எதிர்நோக்கியிருப்பவர் ஆவார்.

சூடானிலிருந்து பத்து வயதில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த Adau Akui Atem Mornyang , சிட்னியிலிருந்து மெல்பேர்னுக்கு குடிபெயர்ந்து modelling செய்துவந்தவர். உலக அழகிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அழகிகள் தெரிவில் எட்டாவது இடத்தைப்பிடித்திருப்பவர். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு தனது modelling துறை ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தவர்.

கடந்த ஜனவரி மாதம் விமானத்தில் போதையில் மேற்கொண்ட தாக்குதல் குறித்து Adau Akui Atem Mornyang நீதிமன்றில் கூறும்போது தனக்கு எதுவும் ஞாபகமில்லை என்றும் தூக்க மாத்திரை சிலவற்றை உட்கொண்டுவிட்டு உறக்கத்துக்குச் சென்றதுதான் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவருக்கெதிரான தண்டனை எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும். 21 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையை இவர் எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now