புதிய விசாவில் Medicare உள்ளடக்கம்: ஆஸி.அரசின் கவர்ச்சிகர அறிவிப்பு!

Regional Visa

According to the Department of Home Affairs new Contributory Parent visa applications are likely to take at least 65 months to be released for final processing Source: Getty Images

ஆஸ்திரேலியாவின் regional area-நகரம் அல்லாத பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ள இரண்டு புதிய விசா வகைகளிலும் Medicare வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விசா உப பிரிவுகளான 489 &187(Regional Sponsored Migration Scheme) ஆகியவை ரத்து செய்யப்பட்டு எதிர்வரும் நம்பர் 16 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள விசா உப பிரிவு 491மற்றும் 494 ஆகியவை ஆஸ்திரேலியாவின் regional பகுதிகளில் குடியேற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் விசா உப பிரிவு 491 Skilled Work (Provisional எனப்படுவது தொழில் ரீதியாக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிவந்து regional பகுதியில் வசிப்பதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது.

விசா உப பிரிவு 494-Skilled Work - Employer Sponsored (Provisional) எனப்படுவது regional பகுதியிலுள்ள தொழில் நிறுவனத்தினால் ஸ்பொன்ஸர் செய்யப்படுவதன் மூலம் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வதற்கு வழியமைத்துக்கொடுக்கிறது.

இந்த விசாக்களின் ஊடாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களிற்கு வெளியே புதிய குடிவரவாளர்கள் வசிக்கவேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய அரசு அந்த விசாக்களின் மீது கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்று குடிவரவு சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலிய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் Medicare மருத்துவ சேவையின் ஊடாக தற்காலிக விசாவிலுள்ளவர்களுக்கு உதவி கிடைப்பதென்பது மிகப்பெரியதொரு அதிஷ்டம் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.


Share

Published

Updated

Source: SBS Malayalam

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand