எதிர்வரும் செப்டம்பர் 1ம் திகதியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிய வீதிச்சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகின்றது.
வீதியில் அவசரசேவைப்பிரிவு வாகனங்கள்(Ambulance, Fire services, Police, State Emergency Service and heavy vehicle enforcement vehicles) ஒலி எழுப்பியவாறோ, அல்லது சிவப்பு, நீல நிற சமிக்ஞை விளக்கை ஒளிர்ந்தவாறோ நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், அல்லது மெதுவாகச் சென்றுகொண்டிருந்தால் நீங்கள் கீழ்க்காணும் விடயங்களைச் செய்ய வேண்டும்.
1. உங்கள் வாகனத்தின் வேகத்தை நன்றாகக் குறைத்து தேவையேற்படின் நிறுத்துவதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
2. குறித்த வாகனத்தை 40km/h -க்கு மேல் வேகத்தை அதிகரிக்காமல் கடந்து செல்ல வேண்டும்.
3. குறித்த வாகனத்திற்கு அருகில் இருக்கும் பணியாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதளவு தூரத்திற்குச் சென்ற பின்னரே, மீண்டும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு அந்த இடத்தில் வைத்து $448 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும். 3 demerit புள்ளிகளும் குறைக்கப்படும்.
வீதியோரங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள அவசரசேவைப்பிரிவு பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்த முயற்சியாக அடுத்த ஒரு வருடத்திற்கு இப்புதிய வீதிச்சட்டம் அமுலுக்கு வருகிறது.
