ஆஸ்திரேலிய நாணயங்கள்-coins எலிசபெத் மகாராணியின் புது தோற்றத்துடன் வெளியிடப்படவுள்ளன.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இவ்வாறு மகாராணியின் புதிய தோற்றம் ஆஸ்திரேலிய நாணயங்களில் பதிக்கப்படவுள்ளது.
நாணயங்களில் இடம்பெறவுள்ள மகாராணியின் புதிய தோற்றம் எப்படியிருக்கும் என்பதை Governor-General Peter Cosgrove இன்றையதினம் வெளியிட்டு வைத்தார்.
Victorian coronation நெக்லஸ் அணிந்திருக்கும் மகாராணியின் கழுத்து மற்றும் தோள்பட்டை என்பன தெளிவாகத் தெரியும்படி அவரது புதிய தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Jody Clark-ஆல் வடிவமைக்கப்பட்ட மகாராணியின் புதிய தோற்றம் பதிக்கப்பட்ட நாணயங்கள் அடுத்த வருடம் முதல் பாவனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
