எரிசக்தியை சேமிக்க விரும்புபவர்கள் மின்சாரம் அல்லது Gas அடுப்புகளுக்கு பதில் induction அடுப்பை பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் induction அடுப்பில் உள்ள மின்காந்தம் pacemaker செயற்பாட்டிற்கு இடையூராக இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.
தனது நண்பியின் வீட்டிற்கு போனால் induction அடுப்பு உள்ள அவரின் சமையல் அறைக்கு தான் செல்வது இல்லை என்று pacemaker பொருத்தப்பட்டுள்ள 72 வயதான Celia Wade கூறுகிறார்.
பாத்திரங்களை சூடு படுத்துவதற்கு பதில் Induction அடுப்பிலிருந்து உருவாகும் மின்காந்தம் அதன் மீதுவைக்கப்படும் பாத்திரத்தில் மின்னலையை உருவாக்கி அதனை சூடுப்படுத்தும்.
அந்த மின்னலை மருத்துவ உபகரணங்கள் இயக்கத்தை பாதிக்கும் என இதய நோய் நிபுணர் Dr Warwick Bishop ABC-இடம் தெரிவித்தார். இதனால் தான் pacemaker இயக்கமும் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்
Pacemaker பொருத்தப்பட்டுள்ளவர்கள் இப்படியான Induction stove-இலிருந்து 2 அல்லது 3 அடி தள்ளி நிற்கவேண்டும் என்று கூறும் Dr Bishop இது போன்ற மின்காந்தம் hair dryer, stereo speaker போன்றவற்றிலும் காணப்படுவதாக கூறுகிறார்.
ஆகவே Pacemaker பொருத்தப்பட்டுள்ளவர்கள் இது குறித்து மேலதிகமாக அவர்களின் மருத்துவரிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று Dr Bishop வலியுறுத்துகிறார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
