SKIP TO MAIN CONTENT

முன்னாள் இந்திய கடற்படை வீரருக்கு பாக்கிஸ்தானில் மரணதண்டனை

முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, பாக்கிஸ்தான் இராணுவ நீதிமன்றம், முன்னாள் இந்திய கடற்படை வீரர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Kulbhushan Yadav
Pakistani journalists watch a video showing Indian national Kulbhushan Yadav, arrested on suspicion of spying, during a press conference in Islamabad Source: AAMIR QURESHI/AFP/Getty Images

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan



Skip to article content

 

Kulbushan Sudhir Yadhav என்பவர் வெளிப்படையாக பாகிஸ்தான் நாட்டின் எதிராக உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்ட்ப்பட்டு 2016ம் ஆண்டு, Balochistan மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். 

 

குல்புஷான் சுதிர் யாதவ் என்பவர், பாக்கிஸ்தானுக்கு எதிரான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், பாகிஸ்தான் மீது உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபடவும், RAW எனப்படும் இந்திய உளவுத்துறை இவரைப் பணித்தது என்று, பாகிஸ்தான் இராணுவத்தின் ஒரு அங்கமான Inter-Services Public Relations (ISPR) கூறுகிறது.

 

ISPR முன்வைத்த குற்றச்சாடுகளை குல்புஷான் சுதிர் யாதவ் ஏற்றுக்கொண்டு அது குறைத்து பத்திரிகையாளாருடன் பேசியுள்ளார்.  அந்தக் காணொளி:

இதன்பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளாது என்பதை இந்திய அதிகாரிகள் நிராகரித்தனர்.  இந்த செய்தி அறிந்ததும் பாகிஸ்தானிய தூதுவரை அழைத்து இந்திய அரசு பேசியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

இவருடைய மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், அது, "திட்டமிடப்பட்ட கொலை என்று நோக்கப்படும்” என்றும், யாதவ் இந்தியக் குடிமகன் தான் என்றும், அவர் கடந்த வருடம் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டார் என்றும் இந்திய அதிகாரிகள் ஊடகவியலாளர்களிடம் சொன்னார்கள்.

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now