SKIP TO MAIN CONTENT

பல்வைத்தியரிடம் போவதைத் தவிர்க்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை வருடமொன்றுக்கு 20 லட்சம்!

dental care
New research reveals Aussies are slacking off with dental hygiene. Source: Pixabay

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் காணப்படும் அதி உயர் பல்வைத்தியச்செலவு காரணமாக வருடந்தோறும் 20 லட்சம் பேர் பல்வைத்தியரிடம் போவதற்கு பின்னடிக்கிறார்கள் அல்லது முற்றாக போவதை தவிர்க்கிறார்கள் என்று Grattan Institute அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பல்வைத்திய செலவு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ தலையிடியாக மாறிவருவதாகவும் அநேகம்பேர் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது பற்கள் தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்வதை வழக்கமாக ஆரம்பித்துள்ளார்கள் என்றும் Grattan Institute மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரியவந்திருக்கிறது.

சில மாநிலங்களில் கிடைத்த தகவல்கள் விசித்திரமாக காணப்பட்டதாக கூறும் Grattan Institute , பல் பிரச்சினையால் சுமார் 30 வருடங்களாக பிரச்சினையை எதிர்நோக்கிவந்த நபர் ஒருவர் கம்போடியாவுக்கு சென்று மூன்று நாட்களில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த பிரச்சினையை தீர்ப்பதாயின் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 5.6 பில்லியன் டொலர் தேவை என்றும் இதனை எவ்வாறு நிவர்த்தி செய்வதென்பது அரசாங்கத்தின் சுகாதார சேவைகள் நிர்வாகத்திலேயே தங்கியுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் பல்வைத்தியவரிடம் நேரம் பெற்று சிகிச்சை பெறுவதற்கு காத்திருக்கவேண்டிய காலப்பகுதி விக்டோரியாவில் 20 மாதங்களாகவும் டஸ்மேனியாவில் 3 வருடங்களாகவும் தற்போதுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now