பிப்ரவரி 22ம் தேதியான இன்றைய தேதியை, வலமிருந்து இடப்புறமாக எழுதினாலும், இடமிருந்து வலமாக எழுதினாலும் ஒரே மாதிரியாக வரும் சிறப்பம்சத்தைப் பெற்றுள்ளது.
அவ்வாறு தோன்றும் எண்களின் தொகுப்பையும் எழுத்துகளின் தொகுப்பையும் ஆங்கிலத்தில் Palindrome என்று அழைப்பர்.
உதாரணத்துக்கு, தமிழில் Palindrome வகையைச் சேர்ந்த வார்த்தைகளான விகடகவி, காகா, குடகு போன்ற வார்த்தைகளை இடம் வலம் என எப்படி எழுதினாலும், அதே வார்த்தைகளே வரும்.
அதேபோல் இந்த தேதி Ambigram என்ற சிறப்பையும் கொண்டுள்ளது.
தலைகீழாக படித்தாலும், நேராக இருப்பது போலவே மாறாமல் வரும் வார்த்தை எண்ணை Ambigram என்பர்.
அந்தவகையில் மின்னிலக்கச் சாதனத்தில் இன்றைய தேதியை நேராகவும் தலைகீழாகவும் வாசிக்கலாம். அது சரியான தேதியைக் காட்டும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
